பபுவோன்Translated into Tamil by Santhipriyaபேயனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள அங்கோர் தோமின் மலையில் உள்ள பெரிய ஆலயமே பபுவோன் . இந்த ஆலயம் சீரமைக்கப்பட்டு இருந்தாலும் அதை செய்யும்போது ஏற்பட்ட சிக்கல்களை சொல்லி மாள முடியாது. பபுவோன் ஆலயத்தை பதினோராம் நூற்றாண்டில் கட்டிய மன்னன் உதயாதித்யவர்மன் II என்பவரே. ஆலயம் அங்கோர் தோமில் மன்னனின் அரண்மனைக்கு அருகில் உள்ளது. பபுவோன் ஆலயம் கட்டப்பட்டபோது அங்கோர் தோம் என்பதே இல்லை என்பதே உண்மை. அன்றைக்கு இருந்த அனைத்து ஆலயங்களை விட 1060 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பபுவோன் ஆலயமே மிகப் பெரியது. அது கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு பின் கட்டப்பட்ட அங்கோர் வாட் ஆலயம் எழும்பும்வரை அதுவே மிகப் பெரிய ஆலயமாக இருந்தது.ஆலய விவரம்ஆலயம் கட்டப்பட்டது பதினோராம் நூற்றாண்டில் (11th Century). ஆலயத்தைக் கட்டியது உதயாதித்யவர்மன் II (ஆண்ட காலம் 1050-1066) பபுவோன் ஆலயம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அது கட்டி முடிந்த சில காலத்துக்குப் பின் பெய்த பெய்த மழையினாலும் அதன் மீதான எடையினாலும் , ஆலயம் உடைந்து விழுந்த போது அதை சீரமைக்க முயன்றனர். ஆனால் அதை செய்ய முடியவில்லை. அதற்கு முன்னால் அந்த ஆலயத்துக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு பழுதடைந்த புராதானச் சின்னமான போரோபுதூர் (Borobudur ) என்பதை பெயர்த்து எடுத்து அதை இன்னொரு இடத்தில் EFEO அதிகாரிகள் வைத்தனர். அதற்கு ம் முன்னர் இன்னொரு பழுதடைந்த அங்கோர் ஆலயமான பண்டே ஸ்ரெய் (Banteay Srei ) என்ற ஆலயத்தையும் அதே முறையில் வெற்றிகரமாக இடம் மாற்றி வைத்தார்கள். ஆகவே அந்த இடம் பெயர்க்கப்பட்ட ஆலயங்களில் கையாண்ட அதே முறையையே பின்பற்றி பழுதடைந்த இந்த பபுவோன் ஆலயத்தையும் இட மாற்றம் செய்ய நினைத்து அதைக் பல பாகங்களாக பெயர்த்து எடுத்தனர். இடிபாடுகளைக் கொண்ட அந்த ஆலயத்தை துண்டு துண்டாக பெயர்த்து எடுத்த பின் கம்போடியாவில் யுத்தம் துவங்கியது. அதனால் அந்த வேலையில் இருந்த அனைவரும் ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அவர்களுக்கு உதவியாக இருந்த உள்ளூர் உதவியாளர் பலர் போரில் மடிந்துவிட்டனர். மேலும் அங்கு வைத்து இருந்த பல வரை படங்கள், குறிப்புப் புத்தகங்கள் என அனைத்தும் அழிந்து விட்டது. ஆகவே பெயர்த்து எடுத்த 300,000 துண்டுகளை ஒன்று சேர்க்க முடியாமல் திண்டாடுகிறார்கள். பல வழிகளையும், கணிப் பொறியில் வரைபடங்கள் போட்டு அவற்றை உபயோகித்தும் பெயர்த்து எடுக்கப்பட்ட துண்டுகளை ஒன்று சேர்க்க முடியவில்லை. அது பெரும் புதிராக உள்ளது. ஆகவே தற்போது வேறு முறைகளை கையாண்டு அவற்றை சரியான இடத்தை அந்தந்த ஒன்று சேர்க்க முயலுகிறார்கள். மேரு மலையைப் சித்தரிக்கும் வகையில் இருக்குமாறு எண்ணி கட்டப்பட ஆரம்பித்த அந்த பபுவோன் ஆலயயத்தின் நீல அகலம் 1394 அடிக்கு 410 அடியாகும் . 656 அடி நீளத்தில் மலையை சுற்றி மூன்று வழிப்பாதை போடப்பட்டு உள்ளது. அன்கோரில் உள்ள மற்ற ஆலயங்களைப் போலவே அந்த ஆலயத்தின் வாயில் மேற்கில் உள்ளது. பேயன் ஆலயத்தின் நான்கு முக அழகைப் பார்க்க வேண்டும் எனில் மேற்கு கோபுரத்தின் இடப்புறம் திரும்பி அங்குள்ள காலரியின் இறுதி சுவர் வரை சென்று அங்கிருந்து பார்க்கவும். பபுவோனின் தலைப் பகுதியில் இருந்த கும்பம் பழுதடைந்து விழுந்துவிட்டது. அந்த ஆலயம் சதுரமான பீடத்தில் மேல் பகுதிகளில் குறுகிக்கொண்டே போகும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. 2002 ஆம் ஆண்டில் நான் அங்கு சென்று இருந்தபோதும் அங்கு வெட்டப்பட்டு வைக்கப்பட்டு இருந்த கல் குவியலைதான் கண்டேன். 2006 ஆம் ஆண்டு அங்கு மீண்டும் சென்றபோது வெட்டப்பட்ட துண்டுகளை ஒன்று சேர்க்கும் ஆலய புனரமைப்பு பணியில் முன்னேற்றம் இருந்தது. விரைவில் அந்த ஆலயம் முடிக்கப்பட்டு விடும் என நினைக்கின்றேன். 2006 ஆண்டு முதல் சுற்றுலா யத்திரிகளை அந்த வேலை நடக்கும் இடத்துக்கு சென்று பார்க்க அனுமதித்து வருகிறார்கள். துண்டுகளை ஒன்று சேர்க்கும் ஆலய புனரமைப்பு பணி முழுவதும் முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். அங்கு போகும் வழிபபுவோன் ஆலயம் அங்கோர் தோமில்தான் உள்ளது. அது பேயனில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது. உங்களை அந்த கட்டுமானப் பணி நடக்கும்போது அனுமதிப்பார்களா எனபது தெரியாது. ஆகவே அதை அரண்மனை வளாகம் அல்லது யானைகளின் மேல்தளம் (Terrace of the Elephants) போன்ற இடங்களில் நின்று கொண்டு தூரத்தில் இருந்து பார்க்கலாம். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |