அங்கோர் தோமின் மன்னர்கள் அரண்மனை வளாகம்Translated into Tamil by SanthipriyaThe Royal Palace of Angkor Thom is the ancient palace of King Suryavarman I, located north of the Baphuon. It is bordered by the Terrace of the Elephants to the east and Preah Palilay to the north. Within its compound is the step pyramid called Phimeanakas. However, the most noticeable thing about the Royal Palace is its absence.பஹுவானின் வடக்கில் உள்ளதே மன்னன் சூரியவர்மன் I (King Suryavarman I,) உபயோகித்து வந்த மன்னர்கள் அரண்மனை (Royal Palace) . அதன் மேற்கில் யானைகளின் தளமும், கிழக்கில் பிரயாஹ் பாலிலேயும் (Preah Palilay) உள்ளன . அதன் வளாகத்துக்குள்ளே பிரமிட் வடிவிலான பிமினியாக்காஸ்சும் (Phimeanakas) உள்ளது. அந்த அரண்மனை வளாகத்துக்குள் உள்ள தெய்வீகமல்லாத அனைத்து கட்டிடங்களுமே காலத்தால் அழிந்துவிடக் கூடிய மரக் கட்டையினால் கட்டப்பட்டு இருந்தன . அதனால்தானோ என்னவோ இன்றும் தெய்வீகத்துக்காக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் குளங்கள் மட்டுமே அன்று கம்பீரமாக இருந்த அதன் அழகை இன்றும் பறைசாற்றிக் கொண்டு உள்ளன. அரண்மனையை சுற்றி வடதெற்கில் 246 மீட்டர் நீளமும் மேற்கு கிழக்கில் 585 மீட்டர் நீளமுமான தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன. அந்த சுவர்களின் மீது பாரையினால் கட்டப்பட்ட கோபுரவாயில்கள் உள்ளன. தெற்குப் பகுதியில் இரண்டும், மேற்கில் ஒன்றுமாக உள்ள அதில் மேற்கில் உள்ளது யானைகள் மேல்தளத்துக்குச் செல்லும் பகுதியை நோக்கி உள்ளது. அந்த அரண்மனை வளாகத்துக்குள் பல கட்டிடங்கள் இருந்துள்ளன. அவற்றின் சுவடுகள் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. அதை வைத்துக் கொண்டு அந்த அரண்மனை அன்று எப்படி இருந்திருக்கும் என்பதை மனக்கண்ணால் பார்த்துக் கொள்ள முடிகின்றது. கட்டிடத்தின் விவரங்கள்இது பன்னிரண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் (12th to 13th Century) மன்னன் சூர்யவர்மன் I (Sooryaverman I )னால் கட்டப்பட்டு உள்ளது.அங்கு எப்படி செல்வது?அங்கோர் தோமுக்குள்ளேதான் அந்த அரண்மனை உள்ளது. பஹுவானில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து வந்தால் அரண்மனையின் தெற்கு கோபுர வாயிலை அடையலாம். சாதரணமாக சுற்றுலா பயண திட்டத்தில் இங்கு செல்வதையும் சேர்த்து இருக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் இதற்கு தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பஹுவனில் உள்ள உணவகத்தில் இருந்து ஒரு டுக் டுக் வண்டியைப் பிடித்து அங்கிருந்து செல்லலாம். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |