பிரசாத் சுயோர் பிரட்Translated into Tamil by Santhipriyaயானை தளம் மற்றும் பிரசாத் சுயோர் பிரட்என்ற இரண்டிற்கும் இடையே ஒரு சாலை உள்ளது. யானை தளத்தின் எதிர்புறத்தில் சாலையை அடுத்து உள்ள பன்னிரண்டு கோபுரன்களான பிரசாத் சுயோர் பிரட் (Prasat Suor Prat ) அங்கோர் தோமின் முக்கிய இடம். அதை கயிற்றின் மீது உள்ள நாட்டியக் கலைஞ்சர்களின் கோபுரம் என்பார்கள். என்னுடைய முதல் விஜயத்தின்போது சிதைந்து இருந்த அந்த இடம் பழுது பார்க்கப்பட்டு வந்தது. அடுத்த விஜயத்தின்போது அவற்றில் பெரும்பான்மயானவை புதுப்பிக்கப்பட்டு இருந்தது. சிலவற்றின் மீது சீரமைக்கும் பணியில் சில மரக் கட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. பிரசாத் சுயோர் பிரட் என்ற பெயர் பின்னர் வந்தது. அதன் அர்த்தம் தொங்கும் கயிற்றில் நடனமாடுபவர்கள் என்பது. ஆனால் அங்கிருந்த கோபுரத்தைப் பார்க்கையில் அதற்கு ஏன் அப்படி அந்தப் பெயர் வந்தது என்பது புரியவில்லை.அந்த கட்டிடம் ஏற்படுத்தியதற்கான காரணமும் புரியவில்லை. ஆனால் சீனாவை சேர்ந்த ஹௌ தகோனின் கூற்றின்படி பன்னிரண்டாம் நூற்றாண்டில் அந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் தொடுத்த வழக்குகளில் அவர்கள் அனைவரும் -வழக்கு போட்டவர், எதிரி என இரு பிரிவினருமே அங்கு சிறை வைக்கப்பட்டு இருந்தனர் . அவர்களில் எவர் முதலில் உடல் நலமின்றிப் போகின்றார்களோ அவர்கள் அந்த வழக்கில் தோற்று விட்டதாக அறிவிக்கப்பட்டனாராம். அந்தக் கட்டிடம் சுண்ணாம்புக் கலவை மற்றும் பாறைகளைக் கொண்டு கட்டப்பட்டு இருந்தது. கோபுரத்தில் தூண்களில் கட்டப்பட்ட ஜன்னல்கள் மூன்று பக்கத்திலும் இருந்தன. வாயில் கதவு யானைகளின் மேல் தளத்தைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டு இருந்தது. என்னுடைய ஆராய்ச்சியின்படி அந்த கோபுரங்கள் எதிரில் உள்ள அரண்மனையில் நடக்கும் படைகளின் அணிவகுப்பைப் பார்க்கும் இடமாக இருந்து இருக்க வேண்டும். கட்டிடத்தின் விவரம்இந்த இடத்தை ஜெயவர்மன் II என்பவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டி உள்ளார்.அங்கு செல்லும் வழிஇந்த இட ம் அங்கோர் தோமில் பேயன் மற்றும் வடக்கு கேட்டுக்கு இடையிலான சாலையின் வலது புறத்தில் உள்ளது. அந்த இடங்களுக்குச் செல்லும் டுக் டுக் வண்டியோட்டிகளுக்கு இந்த இட ம் செல்லும் வழி தெரியும். அவர்கள் தெரியவில்லை என்றால் வேறு டுக் டுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை நீங்கள் நடந்தோ சைக்கிளிலோ சென்றால் உணவகம் முன்னால் அதை நிறுத்தி விட்டு நடந்து செல்லுங்கள். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |