Heading
பிரேயஹ் பாலிலேTranslated into Tamil by Santhipriyaஅங்கோர் தோமின் மிகப் பழைமையான புராதனச் சின்னம் இது. பேயன் மற்றும் வடக்கு கேட்டின் இடையே வடக்கில் இருந்து தெற்கை நோக்கிச் செல்லும் பாதையில் இது அமைந்து உள்ளது. டேப் பிரானாம் (Tep Pranam) என்ற ஆலயத்தின் பின்புறத்தில் செல்லும் பாதை மூலம் அங்கு செல்லலாம். அந்த பாதையில் சுமார் 150 மீட்டர் நடந்தால் சுமார் முப்பது மீட்டருக்கு எட்டு மீட்டர் ( 30 X 8 meter ) அளவிலான மேல் தளம் ஒன்றைப் பார்க்கலாம். அதன் நுழைவாயிலில் துவாரககாபாலர்கள் (dvarapalas) எனப்படும் இரண்டு காவலாளிகளின் சிலைகளில் ஒன்று தலை வெட்டப்பட்ட நிலையில் ஒன்றும் மற்றது குனிந்து கொண்டு உள்ள சிங்கமுமான உருவிலும் உள்ளன. உள்ளே ஒரு தாமரையில் அமர்ந்துள்ள புத்தரின் சிலை , டேப் பிரானானில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றது .பிரேயஹ் பாலிலேயில் புத்தரை தள்ளி உள்ளே ஒரு சுவர் உள்ளது. கிழக்கு புறமாக கதவு உள்ள கோபுரத்தை அங்கு காணலாம். முழுவதும் சிதைந்த நிலையில் கற் குவியலாக இருந்த அதை 1937 ஆம் ஆண்டு புதுப்பித்துள்ளார்கள். அந்த கோபுரத்தின் வாயிலில் புத்தரைப் பற்றிய காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளதைக் காணலாம். கோசம்பியை (Kosambi) விட்டு வெளியேறிய புத்தர் வந்து தங்கிய காட்டுப் பகுதியான பரிலியக்கா ("Parilyyaka") என்ற இடமே அது என்பதினால் அதற்கு பிரேயஹ் பாலிலே என்ற பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். அந்த கோபுரத்தின் பினால்தான் பிரேயஹ் பாலிலே உள்ளது. அதன் அருகில் பல பஞ்சு மரங்கள் உள்ளன. அங்குள்ள உலர்ந்த இலைகள் மீது நடக்கையில் அவை கடக் கடக் என உடையும் சப்தம் நமக்குக் கேட்கும். அங்கிருந்து நாம் தென்புறத்தில் உள்ள அரண்மனை வளாகத்தில் உள்ள பிமினிகாஸுக்கு (Phimeanakas) செல்லலாம். கட்டிட விவரம்இந்த புனித இடம் ( sanctuary ) பன்னிரண்டாம் நூற்றாண்டில் (12th Century) கட்டப்பட்டு உள்ளது. அங்குள்ள கோபுரம் பன்னிரண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டின் (12th to 13th Century) முற்பகுதியில் கட்டப்பட்டு உள்ளது.பிரேயஹ் பாலிலேக்குச் செல்லும் வழிபிரேயஹ் பாலிலே அங்கோர் தோமிற்கு உள்ளேயேதான் உள்ளது. பிமினகாஸ்சில் இருந்து 400 மீட்டர் தொலைவிலும், டேப் பிரனாமில் இருந்து 280 மீட்டர் தொலைவிலும் உள்ளது. பேயனில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்வதே சிறந்தது. It is best explored on foot, along with the other ruins in Angkor Thom. Get your tuk tuk driver to drop you at the Bayon, and walk around to explore the sights in Angkor Thom. | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |