சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள் ஹரிஹராலயா
Translated into Tamil by Santhipriya <----:---->ஹரிஹராலயாவும் அதன் வரலாறும்
ஒன்பதாம் நூற்றாண்டில் 'க்ஹ்மேரில்' உருவானதே 'ஹரிஹராலயா' ( Hariharalaya) எனும் நகரம். அதை ஜெயவர்மன் II கட்டி இருக்க வேண்டும் இல்லை என்றால் 'அனிந்திடபுரா' (Aninditapura ) எனும் அரசு மீது அவன் படையெடுத்து வென்றதும் அங்கிருந்து அதைக் கைபற்றி இருக்க வேண்டும். அந்த இடத்தில்தான் 'பிரயாஹ் கோ' (Preah Ko ), 'பேகாங்' (Bakong ), 'லோலெய்' ( Lolei ) மற்றும் 'ப்ரெய் மோண்டி' (Prei Monti) போன்ற ஆலயங்கள் உள்ளன. ஆனால் வரலாற்றின்படி ஹரிஹராலயாவில் சிறிது காலமே தங்கிய மன்னனான ஜெயவர்மன் II அங்கிருந்து ஓடிவிட்டார். அவன் படையெடுத்து வெற்றி பெற்ற சில மன்னர்கள் மீண்டும் வந்து தாக்கியதால் பயந்து தப்பி ஓடி மகேந்திரபர்வத ( Mahendraparvata ) என்ற மலையில் ஒளிந்து கொண்டார். அந்த இடத்தை இப்போது ‘ப்னோம் குலன்’ (Phnom Kulen ) என அழைகின்றார்கள் . மேலும் அங்கோர் துவங்கிய காலத்தை 802 A D என்கிறார்கள். 802 AD இல் 'ப்னோம் குலனில்' (Phnom kulen ) இருந்தவாறே தன்னை சக்ரவர்த்தி என முடிசூடிக் கொண்டார். ஆகவே அந்த காலத்தைதான் அங்கோர் துவங்கியக் காலம் என கருதப்பட்டது.
ஜெயவர்மன் II தன்னை உலகின் சக்ரவர்த்தி என பிரகனப்படுத்திக் கொண்டு 'ஜகத் தா ராஜா' (Jagat ta Raja) அதாவது மன்னனான கடவுள் தேவராஜா (devaraja) எனப் பட்டம் பெற்றார். அது மட்டும் அல்லாது கடவுளைப் பூஜிப்பது போல தன்னையும் பூஜிக்க வேண்டும் என்பதற்காக சில பண்டிதர்களையும் நியமித்தார்.
லோலெய், (29 February 2008) © Timothy Tye
ஜெயவர்மன் II 835 AD ஆம் ஆண்டில் மறைந்தார். அப்போது அவர் ஹரிஹராலயாவுக்கு வந்து இருந்தார். அவரே அன்கோரில் பல ஆலயங்களை உருவாக்கியவர். ஆனால் அவர் உருவாக்கிய பல ஆலயங்களை அடையாளம் காண முடியவில்லை. 'ப்னோம் குலேனில்' உள்ள 'ரோங் சென்' (Rong Chen) என்ற ஆலயத்தையும் அவரே உருவாக்கி இருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.
ஜெயவர்மன் III அவருடைய தந்தையான ஜெயவர்மன் II க்குப் பிறகு பதவிக்கு வந்தார். அவரே 'பர் மோண்டியைக்' (Prei Monti ) கட்டியவர் . ஆனால் அவரைப் பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை.
அவருக்கு அடுத்து பதவிக்கு வந்தவர் இந்திரவர்மன் I. அவர் ஜெயவர்மன் III னின் உறவினர். அவரைப் பற்றியும் வேறு செய்திகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் பத்து வருடம் (10 years) ஆட்சியில் இருந்திருக்கின்றார் என்றும் அவரும் பல ஆலயங்களைக் கட்டி உள்ளதாகவும் தெரிகின்றது.
பிரயாஹ் கோ, (29 February 2008) © Timothy Tye
இந்திரவர்மன் I னே 'பிரயாஹ் கோ' (Preah Ko ) மற்றும் 'பேகாங்' (Bakong) ஆலயங்களைக் கட்டியவர். மேலும் அவர் பல பெரிய நீர்தேக்கங்களையும் கட்டி உள்ளார். அதில் முக்கியமானது 'இந்திரத்தாடகா' (Indratataka) என்ற ஏரியாகும். அது 3.8 கிலோமீட்டர் நீளமும் 800 மீட்டர் அகலுமானது. ‘ப்னோம் குலனில்’ இருந்து வெளியேறும் தண்ணீரை உபயோகித்துக் கொள்ள வசதியாக அதன் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அணைகளை ஏற்படுத்தினார். அந்த ஏரியின் நடுவில் தீவு போன்ற ஒன்றைக் கட்டி அதில் ஒரு ஆலயத்தை கட்ட நினைத்தார். அதே போல வடக்குப் பகுதியிலும் ஒரு அணையைக் கட்ட நினைத்தார். ஆனால் அவை நிறைவேறும் முன் காலமாகிவிட்டார்.
இந்திரவர்மன் I என்பவர் 886 AD இல் காலமாகிவிட அவருடைய வாரிசுகளிடையே பதவிச் சண்டை ஏற்பட்டது. முடிவாக அவருடைய மகனான யஷோவர்தன (Yashovardhana ) என்பவர் 889 AD இல் ஆட்சியில் அமர்ந்தார்.
பேகாங், (29 February 2008) © Timothy Tye
யஷோவர்தன தன்னுடைய தந்தையின் தலைநகரான ஹரிஹராலயாவில் தங்க விரும்பவில்லை. தன்னுடைய தந்தை விட்டுவிட்டுச் சென்ற காரியங்களை முடிக்கவே எண்ணினார். 'இந்திரத்தாடகா' வின் வடக்குப் பகுதியிலும் அவசரம் அவசரமாக ஒரு அணைக் கட்டினார். ஆனால் அதுவோ அவர் தந்தை கட்ட நினைத்து இருந்த நினைத்த அளவைவிட சிறியதாக அமைந்துவிட்டது. . அவருடைய தந்தை அந்த ஏரியின் நடுவில் கிழக்கு மற்றும் மேற்கில் இருந்து 1900 மீட்டர் தூரம் உள்ளபடியும், வடக்கு மற்றும் தெற்கில் இருந்து 550 மீட்டர் தூரத்தில் ஏரியின் நடு மையத்தில் இருக்குமாறும் தீவைக் கட்ட நினைத்தார். ஆனால் அவசரவசரமாக தந்தையின் கனவை நிறைவேட்ற முயன்றதின் விளைவாக வடக்குப் பக்க ஆணை தீவில் இருந்து 250 மீட்டர் தூரத்திலேயே அமைந்து விட அந்த தீவு அந்த ஏரியின் நடு மையத்தில் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் அந்த தீவில் தனது தந்தையின் நினைவாக ' லோலெய் ' என்ற ஆலயத்தை அமைத்தார்.
அதன் பிறகு தனது தலைநகரை ஹரிஹராலயவில் இருந்து மாற்றி யசோதபுர (Yasodharapura ) என்றப் பெயரில் ‘ப்னோம் பக்ஹெங்கில்’ ( Phnom Bakheng) அமைத்தார்.
[தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
அங்கு செல்லும் வழி
ஹரிஹராலயாவில் சிதைந்து போன நிலையில் உள்ள புராதான சின்னங்களையே 'ரோலுஸ்' குழும ஆலயங்கள் என்கிறார்கள். அந்த இடம் ‘சிம் ரிப்பில்’ இருந்து 13 கிலோ தொலைவில் உள்ளது. ஆகவே அங்கு செல்ல வேண்டும் என்றால் சாலை எண் 6 இல் செல்லவும். அந்த சாலை எண் 6 ன் தெற்குப் பகுதியில் உள்ள ஆலயங்கள் 'பிரயாஹ் கோ' (Preah Ko), 'பேகாங்' (Bakong) , 'பர் மொண்டி'(Prei monti) போன்றவை. அங்கிருந்து மேலும் சென்று பெயர் பலகை உள்ள இடத்துக்குச் சென்றால் ‘லோலெய்’ (Lolei) ஆலயத்தைக் காணலாம்.
[தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
ஹரிஹராலயா செல்லும் வழி - தரைப்படம்
[தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
|