சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள் பிரசாத் டிரபியங் பாங்
Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
‘பிரசாத் டிரபியங் பாங்’ (Prasat Trapeang Phong ) என்பது அன்கோரில் (Angkor) ரோலூஸ் குழுமத்தினை (Roluos Group) சேர்ந்த சிறிய ஆலயம். அதை என்னுடைய நண்பரான நிக் பவுல்டன் (Nic Boulton) சென்று பார்த்து அதைப் பற்றிய விவரங்களைத் தந்து உள்ளார்.
‘பிரசாத் டிரபியங் பாங்’ ஆலயம் பிரசாத் எனப்படும் ஒரே ஒரு கோபுரத்தைக் கொண்டு உள்ளது. அது அனைத்து விதத்திலும் ‘லோலெயைப்’ (Lolie) போலவே உள்ளது. அதன் நுழை வாயில் பாதையில் தேவதைகள் மற்றும் அப்சராவின் சிலைகளும் காணப் படுகின்றன. அந்த ஆலயத்திலும் நுழை வாயில் கிழக்கிலேயே உள்ளது. மற்ற மூன்று வாயில்களிலும் போலிக் கதவுகள் உள்ளன.
ஜெர்மனி நாட்டு வெளிநாட்டு மந்திரிசபை (Federal Foreign Office) தந்த நன்கொடையில் கோலன் (Cologne. ) என்ற இடத்தில் உள்ள விஞ்ஞான பல்கழகத்தை சேர்ந்த அப்சராக்களின் சிலைகளை பராமரிக்கும் திட்டக் குழுவினை (German Apsara Conservation Project) சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்தில் சில இடங்களில் சீரமைப்புப் பணியை மேற்கொண்டனர் .
அங்கு செல்லும் வழி
சமுதாய கல்வி கூடத்தில் (Community Learning Centre) இருந்து தெற்கு நோக்கி அந்த சாலையில் உள்ள இரண்டு மஞ்சள் நிற கட்டிடங்களுக்கு இடையே செல்லவும். இடதுபுறமும் பல கட்டிடங்களைக் காணலாம். சுமார் 200 மீட்டர் தொலைவு நடந்தால் ஒரு 'T' ஜன்ஷன் வரும். இடத்தில் வலதுபுறம் திரும்பி அங்குள்ள கிராமத்தை நோக்கி நடக்கவும். சுமார் 20 மீட்டர் நடந்தால் அந்த சாலை இரண்டாகப் பிரியும். . அதில் இடதுபுற சாலையில் சென்று தெற்குப்புறமாக நடக்கவும். அது நல்ல பாதை இல்லை என்பதினால் வண்டியை எடுத்துச் சென்று இருந்திருந்தால் அதை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லவும். படத்தைப் பார்க்கவும். (see the pictures on this page).
இன்னும் 300 மீட்டர் தொலைவு நடந்தால் அது 90 டிகிரி வளைந்து கிழக்குப் பகுதிக்குச் செல்லும். அதிலேயே சென்று விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாயும் வாய்கால் இடத்தை ( irrigation ditch ) அடையவும் . (இந்தப் படம் வடக்குப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. ஆகவே நீங்கள் இந்த படத்தில் காட்டி உள்ளபடி வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக நடக்க வேண்டும்.
அதே பாதையில் தொடர்ந்து நடந்தால் ‘பிரசாத் டிரபியங் பாங்’ ஆலயத்தின் கோபுரத்தைப் பார்க்கலாம். பல மரங்களிடையே காணப்படும் அந்த மேட்டுப் பகுதியை நீங்கள் அங்கிருந்தே காணலாம். , அங்கு மிகப் பெரிய எறும்புப் புற்றும் (Ant hill ) உள்ளது தெரியும்.
பின் குறிப்பு
இந்த இடத்துக்கு என்னுடைய நண்பர் நிக் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்றார். அது மழை இல்லாத காலம். ஆனால் நீங்கள் மழை காலத்தில் சென்றால் நிலத்துக்கு தண்ணீர் பாயும் வாய்காலில் தண்ணீர் நிரம்பி வழியும். நடப்பது கடினம். ஒரு படகில்தான் செல்ல முடியும்!
ஆலயம் உள்ள இடத்தைக் காட்டும் வழிப்படம்.
‘பிரசாத் டிரபியங் பாங்கை ’ பெரியதாகப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
View Prasat Trapeang Phong in a larger map
பிரசாத் டிரபியங் பாங் ஜங்க்ஷன் (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் ஜங்க்ஷன் (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் ஜங்க்ஷன் பிரசாத் டிரபியங்
பாங் ஜங்க்ஷன் (1February, 2010) © Nick Boulton
வடக்கில் இருந்து 200 மீட்டருக்குக் அப்பால், (1February, 2010) © Nick Boulton
100 மீட்டருக்குக் அப்பால்
, வடக்கில் இருந்து தெரியும் பிரசாத் டிரபியங்
பாங் ஜங்க்ஷன், (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் ஜங்க்ஷன் No 1, (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் ஜங்க்ஷன் 1,(1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் ஆலயம் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில்
இருந்து தரும் காட்சி, (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் கிழக்கு வாயில், (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் ஆலய சுவற்றில் காணப்படும் அப்சராவின் சிலை வடிவம், (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் ஆலய சுவற்றில் சிதைந்து போன நிலையில் காணப்படும் சிலை, (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டிரபியங் பாங் ஆலய ஜன்னல் (1February, 2010) © Nick Boulton
|