தெற்கு கிளியாங்Translated into Tamil by Santhipriyaபன்னிரண்டு கோபுரங்கள் உள்ள பிரசாத் சுவர் பிராட்டின் (Prasat Suor Prat) பின் பகுதியில் அரண்மனையின் தெற்கு புறத்தில் உள்ளது தெற்கு கிளியாங் (South Khleang ) என்ற இடம். இது வட கிளியாங் கட்டப்பட்டதற்கு பிறகே எழுந்துள்ளது. அதுவும் சூர்யவர்மன் I னின் (Suryavarman I) காலத்தில் கட்டப்பட்டு உள்ளது. தெற்கு கிளியாங்கும் வடக்கு கிளியாங்கின் (North Khleang) கண்ணாடி பிம்பம் போன்றே கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இது வடக்கு கிளியாங்கின் அற்புத கலைக்கு ஈடாக இல்லாமல் குறுகலாக கட்டப்பட்டு உள்ளது. இந்த இரண்டு கிளியாங்கின் கட்டிட அமைப்பே பிற்காலத்தில் கிளியாங் கலை எனப்பட்டது. அதை மாதிரியாகக் கொண்டே டா கியோ ( Ta Keo ) மற்றும் பிமினியகாஸ் ( Phimeanakas) போன்றவை கட்டப்பட்டன.நான் அங்கு நல்ல வெய்யில் காலமான பிப்ரவரி மாதத்தில் சென்றேன். சுற்றிலும் கீழே விழுந்து கிடந்த காய்ந்து போன இலைகள் கிடந்தாலும் அங்கிருந்த பார்க் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு இருந்தது. அங்கு செல்லும் வழிதெற்கு மற்றும் வடக்கு கிளியாங் (South and North Khleangs ) என்ற இரண்டு இடங்களும் பிரசாத் சுவர் பிராட்டின் (Prasat Suor Prat) பின் பகுதியில் அங்கோர் தோமில் உள்ள அரண்மனையின் தெற்கு புறத்தில் உள்ளது. நீங்கள் இந்த இடத்தைப் பார்க்க விரும்பினால் அதற்கு தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பேயன் ஆலயத்தின் அருகில் உள்ள உணவகத்தில் இருந்து ஒரு டுக் டுக் வண்டியைப் பிடித்து அங்கிருந்து செல்லலாம். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2011 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |