அங்கோர் தோம்
Translated into Tamil by Santhipriya
அங்கோர் வாட்டை (Angkor Wat) விட பெரிய அளவில் பரப்பளவைக் கொண்டது அங்கோர் தோம் (Angkor Thom ). ஆனால் ஓரே ஒரு ஆலய வளாகமாக உள்ள அங்கோர் வாட்டைப் போல இல்லாமல் அங்கோர் தோமில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மன்னனின் காலத்தில் கட்டப்பட்டவை. அவற்றில் முக்கியமான புராதானச் சின்னங்கள் பேயன் (Bayon ) , பபுவான் (Baphuon ), பிமினகாஸ் (Phimeanakas) என்பன. மேலும் யானைகளின் தளம் (Elephant and the Terrace) , லிபேர் மன்னன் ( Leper King ) தளம், மற்றும் பிரசாத் சுயோர் பிராட் ( Prasat Suor Prat ) தளம் போன்ற பல சிதைந்த நிலையில் உள்ள சின்னங்கள் அந்த இடத்தில் உள்ளன.
க்ஹ்மேர் (Khmer ) என முன்னர் அழைக்கப்பட்ட நகரமே பதினாறாம் நூற்றாண்டில் அங்கோர் தோம் என ஆயிற்று. அதன் அர்த்தம் ' பெருமை மிக்க நகரம்' ( "Great City".) என்பது.
அங்குள்ள பெரும்பான்மையான கட்டிடங்கள் மன்னன் ஜெயவர்மன் II (King Jayavarman VII) காலத்தில் கட்டப்பட்டவை. அதன் பின் வந்த மன்னர்களால் அத்தகைய பிரும்மாண்டமான கட்டிடச் சின்னங்களை கட்ட முடியவில்லை. ஆகவே அந்த மன்னனின் மறைவுக்குப் பின்னர் அங்கோர் நகர நாகரீகம் ( Angkor civilization ) மெல்ல மெல்ல மறையலாயிற்று .
அந்த மன்னனின் மறைவுக்குப் முன்னர் அன்கோரில் கட்டப்பட்டு இருந்த சில புராதான சின்னங்கள் பாபூவன் (Baphuon ) மற்றும் பிமினகாஸ் (Phimeanakas) போன்றவை. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த யசோதபுரா அரசாங்கத்தின் தலை நகரமாக இருந்த பாபூவன் என்ற இடத்தின் மதியப் பகுதியில் உதயாதித்தவர்மன் II ( Udayadityavarman II ) என்ற மன்னன் கட்டிய அங்கோர் நகரின் தென் கிழக்குப் பகுதியை தொட்டு இருந்தவாறு அமைந்ததே அங்கோர் தோம் .
அங்கோர் தோமின் தெற்குக் கோபுரம் (1 March 2008) © Timothy Tye
மன்னன் ஜெயவர்மன் VII அந்த இடத்தை தனது தலை நகரமாக ஆக்கியபோது அங்கோர் தோமை சுற்றிலும் தடுப்புச் சுவர் எழுப்பினார். அந்த சுவற்றை சுற்றி அகழிகள் (Moat) வெட்டப்பட்டு ஐந்து இடங்களில் அதை கடக்க பாலம் (laterite causeways) அமைக்கப்பட்டு இருந்தது. அவை அனைத்தும் முக்கியமான திசைகளில் சாஸ்திரப்படி அமைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த ஐந்தாவது வாயிலே வெற்றிப் பாதை என அழைக்கப்பட்டது.
அங்கோர் தோமில் இருந்த அனைத்து கட்டிடங்களுமே மிகப் பெரிய அளவிலேயே இருந்தன. அங்கோர் தோமின் பரப்பளவு 1.8 மைல் ஆகும் . அகழியின் அகலம் நூறு மீட்டர் (328 ft), ஆழம் ஆறு மீட்டர்(20 ft).
அங்கோர் தோமின் அனைத்து முனைகளிலும் பிரசாத் சுருங் ( Prasat Chrung) எனப்பட்ட பெயரில் சிறிய தொழுகை இடம் (chapels) அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டில் அந்த நகரம் அமைக்கப்பட்ட விவரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. அது மட்டும் அல்ல அந்த காலங்களில் கோட்டை சுவற்றில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் தண்ணீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த வாய்க்கால் மற்றும் சுவற்றின் இடையே நல்ல சாலைகள் போடப்பட்டு இருந்தன. தண்ணீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டதின் காரணம் படை வீரர்கள் தத்தம் வைதீகப் பணிகளை செய்து கொள்ளும் முன் ஓடும் நீரில் குளிக்க வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.
அங்கோர் தோமுக்கு செல்லும் வழி நெடுகிலும் பல விதமான கடவுட்கள், தேவர்கள் அசுரர்கள், நாகங்கள் போன்றவர்களின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த காலத்தில் க்ஹ்மேர் நகரில் பிரபலமாக கேட்கப்பட்டு வந்த பாற்கடலைக் கடைந்த கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு புறத்தில் தேவர்களும் மறு புறத்தில் அசுரர்களும் கையிற்றை இழுப்பது போல சிற்பங்கள் உள்ளன.
அங்கோர் தோமில் தெப் பிரானாம் (25 February 2006) © Timothy Tye
அந்தக் காட்சி அங்கோர் தோமின் பேயன் ஆலயத்தில் உள்ளது. அதில் மந்தாரா என்ற மேரு மலையை (Mount Meru)) கடைவது போன்ற காட்சி உள்ளது. பேயனில் இருந்து செல்லும் சாலை அங்கோர் தோமில் உள்ள எழுபத்தி ஐந்து அடி உயர (75 feet tall) கோபுரங்களின் அருகில் நம்மைக் கொண்டு விடும். அவற்றின் மீது போதிசத்வ அவலோகிடீச்ஸ்வரா (bodhisattva Avalokitesvara ) வின் முகம் நான்கு திசைகளையும் நோக்கியவாறு அமைக்கப்பட்டு இருந்தன. மன்னன் ஜெயவர்மன் VII போதிசத்வ அவலோகிடீச்ஸ்வராவின் மீது அதிக ஈடுபாடு கொண்டவன்.
அங்கோர் வட்டில் இருந்து நீங்கள் அங்கோர் தொமுக்கு வந்தால் முதலில் தெற்கு திசையில் உள்ள கோபுரத்தையே அடைவீர்கள். அதற்குப் பின்னர் மக்கள் அதிகம் பார்க்க விரும்புவது கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களையே.
அங்கோர் தோமில் பார்க்க வேண்டியவை
அங்கோர் தோமிற்கு நீங்கள் சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் கிழே உள்ளது . ஒரு நட்சத்திரம் ( * ) உள்ளது பார்க்க வேண்டியவை, ஆனால் இரண்டு நட்சத்திரக் குறி ( * * ) உள்ளவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.
- அங்கோர் தோம் * *
- பபுவான் *
- பேயன் * *
- மங்கலர்த்தா
- வடக்கு க்ஹ்லீங்
- பிமீனகஸ்
- பிரசாத் சுயோர் பிரட் *
- பிரசாத் டாப்
- அங்கோர் மன்னனின் அரண்மனை *
- தெற்கு க்ஹ்லீங்
- யானை மேல் தளம் *
- லிபேர் மன்னனின் மேல் தளம்
- கம்மைலே ஜீன்நின் சமாதி (
- வட பிரயாஹ் நோக்
- விஹியர் பிரம்பில் லோவெங்
மேலே கூறப்பட்டு உள்ளவைகளைத் தவிர நீங்கள் கீழ் காணப்படுவதையும் சென்று பார்க்க வேண்டும்.
- வடக்கு நுழை வாயில்
- தெற்கு நுழை வாயில்
- மேற்கு நுழை வாயில்
- கிழக்கு நுழை வாயில்
- வெற்றிச் சின்ன நுழை வாயில்
அங்கோர் தோமில் பிரியா பாலில்லே (25 February 2006) © Timothy Tye
அங்கோர் தோம் - சில செய்திகள்
பேயன் மற்றும் அங்கோர் தோமின் அகழி, வெளிச் சுற்று சுவர் சாலைகள் போன்றவற்றை பன்னிரண்டாம் நூற்றாண்டில் மன்னன் ஜெயவர்மன் II கட்டினான். அவன் கட்டியுள்ள மற்ற கட்டிடங்கள் ( சின்னங்கள் ) த ப்ரோஹீம் (Ta Prohm), பன்டேய் கிடி (Banteay Kdei ), பிரயாஹ் கான் (Preah Khan) , நீக் பியான் (Neak Pean), த சோம் (Ta Som), ஸ்ராஹ் சாரங் (Ta Som, Srah Srang), டா ணெய் ( Ta Nei ) , த ப்ரோஹீம் கேல் (Ta Prohm Kel.) போன்றவை.
அங்கு செல்லும் வழி
அங்கோர் தோமிற்கு அதன் தென் பகுதி வாயில் வழியேதான் செல்லுவது சிறந்தது. அங்கோர் வாட்டில் இருந்து அந்த இடம் 1.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கோர் தோமின் வடக்கு கோபு வெற்றி நுழை வாயிலில் வழியே சென்றால் பிரயாஹ் கானில் இருந்து 1.6 கிலோ தூரமும், தா கியோவில் இருந்து 1.0 கிலோ தூரத்திலும் அந்த இடம் உள்ளது.
அங்கோர் தோமின் அரண்மனையின் நுழை வாயில் (25 February 2006) © Timothy Tye
|