பிமினகாஸ்Translated into Tamil by Santhipriyaபாபுஹுவான் என்ற இடத்தில் இருந்து மன்னன் அரண்மனை வளாகத்தில் நுழைந்தால் அங்கு காணப்படுவதே பிரமிட் போன்ற அமைப்பில் கட்டப்பட்டு உள்ள பிமீனகாஸ் (Phimeanakas) எனப்படும் வானத்து மாளிகை ("aerial palace"). இந்த ஆலயத்தில்தான் மன்னன் வந்து வழிபட்டானாம். அதில் தங்க கும்பம் இருந்ததாம். பதிமூன்றாம் நூற்றாண்டில் சீனாவை சேர்ந்த ஹௌ தகோன் (Zhou Daguan ) என்ற ராஜதூதர் அங்கு வந்தபோது பிமீனகாஸ் ஆலயம் தங்க கோபுரம் என அழைக்கப்பட்டதாம். அன்கோரில் உள்ள மற்ற ஆலயங்களைவிட இது சிறியது . நான் அந்த இடத்தை என்னுடைய மனைவியுடன் சென்று பார்த்தேன். வெய்யல் சூட்டினால் அந்த இடம் சூடாக இருந்தது. ஏறுவதற்கு கடினமாக இருந்தது, ஆனால் இறங்குகையில் புகைப் படம் பிடிக்கும் கருவி மற்றும் பிற சாதனங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு சென்று இருந்ததினால் அவற்றின் எடையினால் இறங்குவது ஏறுவதை விட கடினமாக இருந்தது.மன்னன் ராஜெந்திரவர்மனே ( Rajendravarman II) பிமீனகாஸ் ஆலயத்தைக் கட்டத் துவங்கினார். அவருக்குப் பின்னர் வந்தவர்கள் அதில் மாறுதல்களை செய்தார்கள். ஹௌ தகோன் தந்துள்ள செய்தியின்படி அந்த ஆலயத்தின் வரலாறு என்ன என்றால் அந்த ஆலயத்தின் மேல் பகுதியில் ஒரு நாகம் இருந்ததாகவும், அது இரவில் பெண்ணாக மாறிவிடும், ஒவ்வொரு இரவும் அந்த நாட்டு மன்னன் அங்கு வந்து அந்த பெண்ணுடன் அந்த கோபுரத்தில் படுத்துக் கொண்டு இருக்க வேண்டும். அதன் பின்னரே அவன் தன்னுடைய மனைவியிடமோ அல்லது வேறு பெண்ணிடமோ செல்லலாம். அப்படி ஒரு இரவு செய்யத் தவறினாலும் கடுமையான தீய விளைவுகளை அவன் நாடு சந்திக்கும், அவனும் மரணம் அடைந்து விடுவான். அந்த கோபுரத்தில் இருந்த தங்க கலசம் அந்த நாகமே ஏற்படுத்தி இருந்தது. அந்த புராணக் கதையை அங்கிருந்த உள்ளூர் சீனர்களே அவருக்கு சொல்லி இருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த நம்பிக்கை க்ஹ்மேர் மக்களிடையே இல்லை. ஆலய விவரம்பத்தாம் நூற்றாண்டில், 941-968 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த மன்னன் ராஜெந்திரவர்மனே பிமீனகாஸ் ஆலயத்தைக் கட்டி உள்ளார்.ஆலயத்துக்குச் செல்லும் வழிஆலயம் அங்கோர் தோமில் மன்னன் அரண்மனை வளாகத்தில் உள்ளது. பஹுவானின் வடக்குப் பகுதியில் இருந்து இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த அரண்மனை வளாகத்தில் நுழைந்து விட்டால் உங்களால் அந்த ஆலயத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. ஏன் எனில் அங்குள்ள கட்டடங்களில் அதிக உயரமான பிரமிட் கட்டிடம் அதுதான் . ஒரு டுக் டுக் வண்டியை எடுத்துக் கொண்டு அங்கு செல்வது நல்லது . | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |