மேற்கு பிரசாத் டாப்Translated into Tamil by Santhipriyaபேயன் மற்றும் அங்கோர் தோம் கோபுரங்களின் இடையில் புகழ் அற்ற இடமான மேற்கு பிரசாத் டாப் (West Prasat Top) உள்ளது. அங்கு சமீபத்தில் சென்றுவிட்டு வந்த என் நண்பர் பென்னி யாப் (Benny yap ) என்பவர் தந்த தகவலைக் கொண்டே இதை எழுதி உள்ளேன். பத்தாம் நூற்றாண்டில் (10th Century) ஒரு இந்து ஆலயமாக (Hindu shrine) கட்டப்பட்ட இந்த ஆலயம் பதிமூன்றாம் நூற்றாண்டில் (13th Century) புத்தர் (Buddhist t) ஆலயமாக மாற்றப்பட்டது. இது மங்கலார்த்தா அல்லது கிழக்கு பிரசாத் டாப் எனப்படும் ஆலயத்தைப் போலவே உள்ளது. இந்த ஆலயம் அதிக புகழ் பெற்றது இல்லை என்பதினால் அன்கோரை முழுமையாக பார்க்க ஆவல் கொண்டவர்கள் மட்டுமே அங்கு செல்கிறார்கள். பெரும்பாலான யாத்ரிகர்கள் அங்கு செல்வது இல்லை.அங்கு செல்லும் வழிபேயனில் இருந்து மேற்கு கோபுரத்துக்கு செல்லும் பாதையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் சென்றால் இடதுபுறம் காட்டிற்குள் நுழையும் பாதை தெரியும். அதில் நுழைந்து உள்ளே சென்றால் சுமார் நூறு மீடர் தூரத்தில் உள்ள அந்த ஆலயத்தைப் பார்க்கலாம். | ||
|