பிரசாத் ப்ரெய் மோண்டி
பிரசாத் ப்ரெய் மோண்டி , ரோலுஸ் குரூப் , அங்கோர்படம் உதவி:-பென்னி யப் . இது அவருடைய அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது.
அனைத்து உரிமைகளும் அவருக்கே.
Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
ரோலுஸ் குழும ஆலயங்களில் பிரசாத் ப்ரெய் மோண்டி (Prasat Prei Monti ) முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இது c. 842-877 AD காலத்தில் ஆண்ட மன்னன் ஜெயவர்மன் III ( Jayavarman III ) காலத்தை சார்ந்தது. இந்த ஆலயம் கட்டிடக் கலைக்காக முக்கியத்துவம் பெறவில்லை , ஆனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் என்றால் அது மன்னனின் ராஜிய ஆலயமாகவே இருந்துள்ளது.
இந்த விவரங்களை நான் என்னுடைய நண்பரான பென்னி யாப்பிடம் (Benny Yap) இருந்து பெற்றேன் என்பது மட்டும் அல்ல அதன் புகைப் படங்களையும் அவரே தந்து உதவினார். பென்னியினால் அந்த ஆலயத்தை எளிதில் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் சென்ற டுக் டுக் வண்டி ஓட்டி உள்ளூரில் இருந்தவர்களிடம் விசாரித்து விசாரித்து அந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றார். ஆனால் அந்தப் பாதை மிகவும் குறுகலாக இருந்ததினால் வண்டியில் இறுதிவரை செல்ல முடியவில்லை. அந்த குறுகலான தூசிப் படிந்த பாதையில் பென்னி சுமார் 500 மீட்டர் நடந்து செல்ல வேண்டி இருந்தது. முடிவாக பல மரங்களுக்கு இடையே இருந்த அந்த மூன்று கட்டிடங்களை அவர் கண்டுபிடித்தார். இடிந்து பாழடைந்த நிலையில் காணப்பட்ட அவற்றில் இருந்த கலைநய வடிவமைப்புக்கள் சரிவரத் தெரியவில்லை. மழைகாலத்தில் செல்லும்போது அந்தப் பாதையில் கவனமாகச் செல்ல வேண்டும். இல்லை என்றால் சுற்றிலும் உள்ள பெரும் செடி கொடிகளின் புதர்களினால் வழி தவறி விடும்.
சிதைவுகள் பழுது பார்க்கப்படாமல் உள்ள பிரசாத் ப்ரெய் மோண்டி
படம் உதவி:-பென்னி யப் . இது அவருடைய அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது.
அனைத்து உரிமைகளும் அவருக்கே.
பிரசாத் ப்ரெய் மொண்டிக்குச் செல்லும் காட்டு வழிப் பாதை
படம் உதவி:-பென்னி யப் . இது அவருடைய அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது.
அனைத்து உரிமைகளும் அவருக்கே.
|