சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள் பேகாங்
Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
'ரோலூஸ்' (Roluos) குழும ஆலயங்களில் சிறப்பானது ‘பேகாங்’ ஆலயமே. அது 'சிம் ரிப்'பன் (Siem Reap) தென் கிழக்குப் பகுதியில் பதினைந்து (15) கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த இடத்தில் மூன்று ஆலயங்கள் உள்ளன. அவை 'பிரசாத் கோ' (Preah Ko ) லோலெய்’ (Lolei ), மற்றும் 'பேகாங்' (Bakong) போன்றவை. அவை ஒன்பதாம் நூற்றண்டை (9th century) சேர்ந்தவை. ஹரிஹரலய (Hariharalaya ) வின் பெயரில் இருந்தே ' லோலெய்’ என்ற பெயரும் வந்ததாம். இந்த இடம் சற்று தள்ளி இருப்பதினால் பலரும் இங்கு செல்வது இல்லை.
881 AD காலத்தில் ‘பேகாங்’ கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஆகவே அது அங்கோர் வாட்டைவிட பழமையானது. 877 காலத்துக்குப் பின்னர்தான் 'ஜாவாவில்' ( Java ) இருந்து மன்னன் ஜெயவர்மன் II (Jayavarman II ) இங்கு வந்தார். ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் மன்னன் ஜெயவர்மன் II ஜாவாவில் இருந்து வரவில்லை, மாறாக மலேசியா தீபகற்பத்தில் (Malay peninsula) இருந்து வந்துள்ளார் என்கிறார்கள். அவர் இந்த இடத்துக்கு வரும் முன்னரே இருந்த ஹரிஹராலயாவுக்கு இரண்டு முறை வந்துள்ளாராம். அப்போதுதான் மன்னன் எனும் கடவுள் என்ற பொருள் தரும் 'தேவராய' (Devaraja) என்ற அடைமொழிப் பெயர் ஏற்பட்டது. நாற்பத்தி எட்டு ஆண்டுகள் (48) ஆட்சி செய்துவிட்டு 850 AD இல் 'ப்னோம் குலனில்' (Phnom Kulen) மன்னன் ஜெயவர்மன் II இறந்தப் பிறகு அவருடைய வம்சாவளியினர் ஆண்டனர். அவர்களில் யசோவர்மனே (Yasovarman ) முதன் முதலாக ‘ப்னோம் பக்ஹெங்கை’ (Phnom Bakheng) தலை நகராகக் கொண்ட அங்கோர் ராஜ்யத்தை நிறுவினார்.
'மேசோமெரிக்காவைப்' (Mesoamerica ) போலவே பிரமிட் போன்ற தோற்றத்தில் மலை ஆலயத்தை 'க்ஹ்மேர் '(Khemer) மக்கள் கட்டத் துவங்கினார்கள். ஒரு மேட்டான இடத்தில் இரண்டு வாயில்களைக் கொண்ட 'பேகாங்' ஆலயத்தை கட்டி அதைச் சுற்றி அகழியையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஆலயம் சுமார் நானூறு ஆண்டுகள் பழுதடையாமல் இருக்கும் என நம்பினார்கள்.
பேகாங்கில் செங்கல்லினால் கட்டப்பட்ட ஒரு கோபுரம்
பேகாங்கின் ஜன்னல்களில் செதுக்கப்பட்டு உள்ள சிற்பங்கள் இன்னமும் சிதைவு அடையாமல் அப்படியே உள்ளன. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தின் மேல் புதிய பகுதி கட்டப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகின்றது.
கட்டிட விவரம்
ஒன்பதாம் நூற்றாண்டின் (9th Century ) 877-889 காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் இந்திரவர்மன் I னால் (King Indravarman I) இது கட்டப்பட்டு உள்ளது.
அங்கு செல்லும் வழி
'சிம் ரிப்பன்' (Siem Reap) கிழக்குப் புறத்தில் ரோலுஸ் குழுவின் இந்த 'பேகாங்' ஆலயமும் அமைந்து உள்ளது. ‘சிம் ரிப்பில்’ இருந்து சுமார் 12 .5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. இந்த இடத்துக்கு அதிக பயணிகள் செல்வதில்லை. ஆகவே நீங்கள் ஒரு டுக் டுக் வண்டியில் அங்கு செல்லலாம்.
பிரயாஹ் கோ மற்றும் பேகாங் செல்லும் சாலை எண் 6 ரில் வரும் திருப்பம் (1February, 2010) © Nick Boulton
ஒரு பக்க மூலையில் இருந்து தெரியும் பேக்காங்கின் மதியப் பகுதி
பேக்காங்கின் மதியப் பகுதி
சிதைந்து உள்ள நிலையில் சுவர்கள்
பேக்காங்கின் மதியப் பகுதியில் காணப்படும் சில கோபுரங்கள்
பேக்காங் ஆலயத்தின் உள்ளே உள்ள பிரசாத்
கிழக்குப் பகுதி பிரசாத்தின் போலிக் கதவு
பேக்காங் ஆலயத்தின் உள்ளே உள்ள யானையின் சிலை முன்னால் ‘டிம்’
|