சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள் பிரசாத் குக் டாங
Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
‘பிரசாத் குக் டாங்’ (Prasat Kuk Dong) அல்லது ‘குக் டாங்’ என்பது அன்கோரில் சிதைந்துள்ள நிலையில் உள்ள மிகச் சிறிய சின்னம். என்னுடைய இணையதள நண்பர் ‘நிக் பவுல்டன்’ (Nic Boulton) என்பவர் அங்கு சென்று சென்று பார்த்து அதைப் பற்றி எழுதி உள்ளார். அந்த செய்தியை அப்படியே பிரசுரிக்கின்றேன். அதைக் கண்டு பிடிப்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது.
ஆனால் சமுதாயக் கல்விக் கூடம் மற்றும் பண்ணைத் தொழில் பள்ளி போன்ற இடத்தில் இருந்த கிராமத்தினர் உதவியின் மூலம் பிரசாத் ‘குக் டாங்’ உள்ள இடத்தின் சுமார் 150 மீட்டர் முன்பகுதி வரை செல்ல முடிந்தது. அதன் பின் அங்கு ஆடு மாடு போன்ற விலங்குகளை ஓட்டிக் கொண்டு இருந்த ஒரு பெண்மணி மூலம் அந்த ஆலயத்தின் மூக்கு நுனி வரை செல்ல முடிந்தது.
‘நிக்கின்’ கூற்றுப்படி ‘குக் டாங்’ என்பது இருபது மீட்டர் உயர (20 meter) ஒரு மேடான இடத்தில் இருந்தது. அதற்குள் பல உடைந்தப் பகுதிகள் கிடந்தன. அந்த மேட்டை சுற்றி சமமட்டமான தரை இருந்தது. அது அந்த காலத்தில் ஆலயத்தை சுற்றி இருந்த அகழியாக இருந்து இருக்கலாம்.
இங்குள்ள படத்தைப் பாருங்கள் . அங்குள்ள மற்ற இடங்களைவிட அதிகம் சிதையாமல் லிங்கம் உள்ள பீடம் உள்ளது. மேலும் அதை சுற்றி சொரசொரப்பான கட்டிடப் பொருட்கள் இறைந்துக் கிடந்தன.
அங்கு செல்லும் வழி
‘கோக் ஸ்ட்ரோக்’ (Kok Srok) எனும் இடத்தில் உள்ள சமுதாயக் கல்விக் கூடத்தில் (Community Learning Centre ) இருந்து வடக்கு நோக்கிப் போக வேண்டும். நாற்பது (40) மீட்டர் சென்றதும் ஒரு ஜன்ஷன் வரும் அது நீங்கள் சென்ற பாதையைவிட ஒரு மீட்டர் கீழ் மட்டத்தில் இருக்கும். அது நல்ல சாலையாக உள்ளது. ஆனாலும் டுக் டுக் வண்டிக்காரர்கள் அங்கு போவார்களா என்பது தெரியவில்லை. அங்கிருந்து கிழக்கு நோக்கி 700 மீட்டர் செல்லவும். அங்கு பல கிளை சாலைகள் இருந்தாலும் நேராகச் செல்லும் ஒரு மண் சாலையை பார்க்கலாம். . இடப்புறம் குறுக்காக ஒரு விவசாய நிலம் தென்படும். ஆகவே அந்த சாலையில் இருந்து குறுக்காக நடந்து சென்றால் அந்த நிலத்தின் வடகிழக்குப் பகுதியை அடையலாம். அங்கிருந்துப் பார்த்தால் புதர்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த ஆலயம் உள்ள மேடு தெரியும் . அந்த ஆலயத்துக்குள் செல்ல பல வழிகள் இருந்தாலும் அதே வடகிழக்கில் இருந்து இருபது மீட்டர் தொலைவில் உள்ள நுழைவு இடமே சிறந்தது.
அங்கு செல்லும் வழிக்கான தரைப்படம்
View Kuk Dong in a larger map
குக்டாங் புகைபடங்கள்
குக் டாங் (1February, 2010)
© Nick Boulton
குக் டாங்கில் இருந்திருக்கக் கூடிய தரை (1February, 2010)
© Nick Boulton
குக் டாங்கில் உள்ள லிங்கத்தின் பீடம். ஆனால் லிங்கம் காணவில்லை.
(1February, 2010) © Nick Boulton
குக் டாங் செல்லும் வழி. இந்த இடத்தில் வலதுபுற சாலையில்
செல்லவும் (1February, 2010), Nick Boulton
மண் பாதையில் மற்றும்இவற்றின் இடையே செல்லவும்;(1February, 2010) © Nick Boulton
ஜங்ஷன் 3 ல் இருந்து குங்க்டாங் ஜன்ஷனுக்கு செல்லும் பாதை
(1February, 2010), Nick Boulton(இந்தப் படத்தில் நீங்கள் ஜங்ஷன் 3 றை மேற்கில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் அங்கிருந்து வடமேற்கு பகுதிக்கு வேண்டும் எனில் அதாவது 1/8 வளைவாக இடதுபுறத்தில் திரும்பி நடக்க வேண்டும்)
|