சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள் ப்ரெய் மோண்டி
Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
ரோலூஸ் குழுமத்தில் உள்ள இடிந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னம். இதை 'ப்ரெய் மோண்டி' அல்லது 'பிரசாத் ப்ரெய் மோண்டி' (Prasat Prei Monti) என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயம் ரோலூஸ் குழுமத்தில் உள்ள 'ப்ரயாஹ் கோ', 'பேகாங்' மற்றும் 'லோலெய்' ( Preah Ko, Bakong and Lolei) போன்ற மூன்றை விடப் பழமையானது. இதை 802 AD காலத்தில் அரசாண்ட ஜெயவர்மன் II (Jayavarman II. ) னுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயவர்மன் III (Jayavarman III ) கட்டி உள்ளார்.
மற்ற மூன்றுடன் இதை ஒப்பிட்டால் இது சிறியது என்றாலும் அதன் வளாகத்துக்குள் மன்னன் ஜெயவர்மன் III னின் அரண்மனை இருந்தது என்பதில் இருந்து அதன் அளவைப் புரிந்து கொள்ளலாம்.
[தொழில் நுட்பக் கோளாறினால் மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
கட்டிட விவரம்
இதை ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் (Mid 9th Century) 835 - 877 AD காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் ஜெயவர்மன் III (Jayavarman III ) கட்டி உள்ளார்.
அங்கு செல்லும் வழி
இந்த இடத்துக்குச் செல்லும் வழி சற்று கடினமானது . ஆனால் இதை அடைவதற்கு முன்னால் நீங்கள் ரோலூஸ் குழுமத்தில் உள்ள மற்ற மூன்று ஆலயங்களுக்குச் சென்றப் பின் இங்கு வருவதே சிறந்தது. 'சிம் ரிப்பில்' (Siem Reap) இருந்து ஆறாம் எண் (No 6 ) பாதை வழியே சென்றால் இந்த புராதான ஆலயம் பதிமூன்று கிலோ மீட்டர் (13 kilometers) தொலைவில் உள்ளது. அதே சாலையில் 'பிரயாஹ் கோ' மற்றும் 'பேகாங்' (Preah Ko and Bakong) செல்லும் வழியைக் காட்டும் பெயர் பலகைக்கு இடதுபுறம் சென்று அங்குள்ள அகழியை சுற்றிப் போக வேண்டும். சுமார் நானூறு மீட்டர் (400 meters) தொலைவில் வலதுபுறத்தில் 'பிரியாஹ் கோ' தெரியும். இன்னும் தொடர்ந்து சென்றால் 'பேகாங்கின்' அகழியை வடக்குப் பக்கத்தில் காணலாம். அதையும் தாண்டி அதே பாதையில் சென்றால் வரும் ஜன்ஷனில் இடப்புறம் திரும்பவேண்டும். அங்கிருந்து ஆயிரம் மீட்டர் (1000 meters) தொலைவில் 'ப்ரெய் மோண்டியின்' மேற்கு பக்கத்தைப் பார்க்கலாம்.
[தொழில் நுட்பக் கோளாறினால் மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
இது பற்றி மேலும் படிக்க இங்கு செல்லவும் :-'பிரசாத் ப்ரெய் மோண்டி' in EarthDocumentary
'ப்ரெய் மோண்டி செல்லும் வழி- தரைப்படம்
[தொழில் நுட்பக் கோளாறினால் மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
'பிரசாத் ப்ரெய் மோண்டி'
author: Khmersearch in
'பிரசாத் ப்ரெய் மோண்டி'
author: Khmersearch in
'பிரசாத் ப்ரெய் மோண்டி'
author: Khmersearch in
'பிரசாத் ப்ரெய் மோண்டி'
author: Khmersearch in
|