டெப் ப்ரணாம்Translated into Tamil by Santhipriyaடெப் ப்ரணாம் (Tep Pranam) என்பது ஆலயம் அல்ல. அங்கோர் தோமில் மிகப் பெரிய புத்தரின் சிலை வைக்கப்பட்டு உள்ள இடம். ப்ரணாம் (Pranam) என்றால் கடவுளை தொழு என்று அர்த்தம். வடக்கு கேட்டில் (North Gate) இருந்து பேயனுக்குச் (Bayon) செல்லும் சாலையில் கிழக்கு பகுதியில் இது உள்ளது. லேபர் மன்னன் மேல் தளத்தில் இருந்து பார்த்தல் டெப் ப்ரணாம் தெரியும். லேபர் மன்னன் தளம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 75 மீட்டர் தூரம் எட்டு மீட்டர் அகல ( 8 meter) மேல்தளப் பாதையில் சென்றால் அந்த இடத்தை அடையலாம். அங்கு செல்லும் பாதையில் காவல் சிங்கங்களின் சிலையும் கைபிடித் தூண்களும் வேலைபாடுகளுடன் அமைந்துள்ளன. நான் அங்கோர் தோமிற்கு பல முறை சென்று இருந்தாலும் இந்த முறைதான் டெப் ப்ரணாமிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.டெப் ப்ரணாம் புத்தரின் சிலை தற்போது நன்கு பாதுகாக்கப்பட்டு வைகப்பட்டு உள்ளது. முதலில் இருந்த மரக் கட்டையிலான கட்டிடம் எடுக்கப்பட்டு விட்டது. ஒரு தாமரை மீது புமிஸ்பர்ச முத்திரை (bhumisparsa-mudra ) கோலத்தில் அமர்ந்துள்ள காட்சியில் புத்தர் காணப்படுகின்றார். அந்த காட்சியை காணும்படி பூமியில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுவது போல உள்ளது. கட்டிட விவரம்அது பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டில் (15th or 16th Century) கட்டப்பட்டு இருக்க வேண்டும்.அங்கு செல்லும் வழிலேபர் மன்னன் தளத்தில் இருந்து வடக்கில் உள்ள அந்த இடத்திற்கு செல்லும் வழி அனைத்து டுக் டுக் வண்டி ஓட்டிகளுக்கும் தெரியும். இல்லை என்றால் வழியில் உள்ள உணவகங்களில் உங்கள் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து செல்லுங்கள். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |