யானைகளின் தளம்Translated into Tamil by Santhipriyaபபுவானில் (Baphuon ) இருந்து லேபர் மன்னன் தளம் வரை முந்நூறு மீட்டர் தூரத்துக்கு பரவி உள்ளது இந்த யானைகளின் தளம் (terrace-of-the-elephants) . அங்கோர் தோமில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் போகும் பாதையில் பேயன் மற்றும் பபுவானைத் தாண்டியதும் இடது புறத்தில் இதைப் பார்க்கலாம். பூமியில் இருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ள இதில் யானைகளின் பல வடிவங்கள் காணப்படுகின்றன. அதன் கோடியில் கருட மனிதர்களின் உருவச் சிலைகளும் உள்ளன. அதையும் தாண்டி லேபர் மன்னனின் தளம் (Terrace of the Leper King) அமைந்து உள்ளது. ஆனால் லேபர் மன்னனின் தளத்தில் உள்ள சித்திரகள் யானை தளத்தைப் போல அழகானவையாக இல்லை. ஒரு இடம்பெரியதாகவும், இரண்டு அதைவிட சிறியதாகவும் அமைந்து உள்ள இது மூன்று தளங்களில் அமைந்துள்ளது. தெற்குப் பகுதியில் உள்ள படிக்கட்டின் மீது மூன்று தலை கொண்ட யானை தனது தும்பிக்கையில் தாமரை மலரை ஏந்திக் கொண்டு காட்சி தருகின்றது. மத்தியில் உள்ள படிக்கட்டில் அந்த படிக்கட்டை பாதுகாப்பது போல சிங்கத்தின் சிலைகளும் கருடனின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.பபுவானின் அருகில் வரிசையாக உள்ள டுக் டுக் வண்டிகள் விடப்படும் இடத்தில் இறங்கி வடக்கு அங்கோர் தோம் மற்றும் பேயனின் அற்புதக் கட்சிகளைக் காணலாம். யானைகள் தளம் உயரத்தில் அமைந்து இருப்பதினாலும் அதற்கு எதிரில் பெரிய காலி நிலம் இருந்ததினாலும் மன்னர்கள் அந்த தளத்தில் நின்று கொண்டுதான் படை வீரர்களின் அணிவகுப்பை பார்ப்பார்களாம். நான் அங்கு வெயில் காலமான பிப்ரவரி மாதம் சென்று அங்கிருந்து ஆசை தீர பல புகைப் படங்களை எடுத்து வந்தேன். கட்டிட விவரம்இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் (12th Century) 1181-1220 காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் ஜெயவர்மன் II னால் கட்டப்பட்டுள்ளது.அங்கு போகும் வழிபேயன் ஆலயத்தின் வடக்குப் பகுதியில் உள்ள இந்த இடத்துக்கு டுக் டுக் வண்டிகளில் செல்லலாம். அனைத்து டுக் டுக் வண்டி ஓட்டிகளுக்கும் அங்கு செல்லும் வழி தெரியும். நீங்கள் மோட்டார் சைகிள் அல்லது சாதாரண சைக்கிளில் சென்றால் வண்டியை உணவகங்களின் முன் நிறுத்திவிட்டு நடந்து சென்று அங்குள்ள இடங்களைப் பார்க்கலாம். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |