லீபர் மன்னனின் மேல் தளம்Translated into Tamil by Santhipriyaஅங்கோர் தோமில் (Angkor Thom) யானைகளின் தளத்தை ( Terrace of the Elephants ) அடுத்து உள்ளதே லீபர் மன்னனின் (Leper King) தளம். தனியாக மன்னனின் சிலை அங்கு இருந்ததினால் அதற்கு அந்தப் பெயர் வந்துள்ளது. அந்த இடம் ஜெயவர்மன் VIII காலத்தில் பழுது பார்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். ஏன் என்றால் அந்த கால கட்டத்தில்தான் அந்த மன்னன் சேதம் அடைந்து இருந்த தனது அரண்மனை சுவர்களை பழுது பார்த்தாராம். மேல்தளத்தின் சுவர்களில் அற்புதமான வேலைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் பல தெய்வங்களின் உருவங்கள் தத்தம் கைகளில் வாட்கள், குடைகள் போன்றவற்றை ஏந்தியவண்ணம், மற்ற பல உருவங்களுடனும் காட்சி தருகின்றன. அந்த தளத்தின் மாடியில் முன்னர் வைக்கப்பட்டு இருந்த மன்னனின் அதே மாதிரியான உருவச் சிலை வைக்கப்பட்டு உள்ளது. முதலில் வைக்கப்பட்டு இருந்த உண்மையான சிலை தற்போது பான் பே தேசிய காட்சி அகத்தில் (Phnom Penh National Museum) வைக்கப்பட்டு உள்ளது . இப்போது உள்ள சிலையின் தலைப் பகுதியைக் கூட திருடர்கள் சேதப்படுத்தி இருந்ததாக அங்குள்ளவர்கள் கூறினார்கள்.லீபர் மன்னனின் சிலையை யமதர்ம ராஜனின் சிலை என்கிறார்கள். அது போன்ற காட்சி அங்கோர் வாட்டின் காட்சியகத்திலும் உள்ள யமன் காட்சிப் பிரிவிலும் உள்ளது. ஆங்கிலத்தில் லீபர் என்றால் தொழு நோயாளி என்று அர்த்தம். ஆகவே முன்னர் இருந்த சிலை பறவைகளின் எச்சில் பட்டு வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக ஆகி பழுதடைந்து இருந்ததினால் அதை தொழு நோய் எனக் தவறாகக் கருதி அப்படி அந்தப் பெயரை வைத்து உள்ளார்கள். கட்டிட விவரம்பதிமூன்றாம் நூற்றாண்டின் (13th Century) 1181-1220 ஆம் காலத்தில் ஆண்ட ஜெயவர்மன் VII (Jayavarman VII ) கட்டிய அதை அடுத்து வந்த ஜெயவர்மன் VIII (Jayavarman VIII ) புதுப்பித்துள்ளார்.அங்கு செல்லும் வழியானை தளத்தின் வட பகுதியில் அங்கோர் தோமில் உள்ள இந்த இடத்துக்கு செல்லும் வழி அனைத்து டுக் டுக் வண்டி ஓட்டிகளுக்கும் தெரியும். நீங்கள் மோட்டார் சைக்கிள் அல்லது சாதாரண சைக்கிளில் சென்றால் அங்கோர் தோமின் உணவகங்கள் முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு நடந்தே செல்லலாம். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |