விஹியர் ப்ரம்பில் லோவெங்Translated into Tamil by Santhipriyaவிஹியர் ப்ரம்பில் லோவெங்கை ஆராய்வோம்அங்கோர் தோமில் (Angkor Thom) உள்ள அரண்மனை வளாகத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கிளியான்கின் (South Khleang) கிழக்கு பகுதியில் உள்ளதே விஹியர் ப்ரம்பில் லோவெங் (Vihear Prampil Loveng ) எனப்படும் புத்தர்களின் தளம். பேயன் ( Bayon) ஆலயம் புத்தர்களின் ஆலயமாக இருந்தபோது இங்குள்ள புத்தரின் சிலை மன்னன் ஜெயவர்மன் VII னால் (Jayavarman VII ) வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த மன்னனான ஜெயவர்மன் VIII (Jayavarman VIII ) என்பவர் அந்த ஆலயத்தில் இருந்த புத்தர் சிலையை எடுத்துவிட்டு அதை இந்துக்களின் ஆலயமாக மாற்றி அங்கு சிவனின் சிலையை வைத்தார்.1933 ஆம் ஆண்டில் பல பாகங்களாக உடைந்து இருந்த நிலையில் அந்த புத்தரின் சிலை பேயனின் மத்தியப் பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த உடைந்த பாகங்கள் அனைத்தையும் வெளியே எடுத்து அவற்றை மீண்டும் முந்தைய புத்தரின் சிலையைப் போலவே அற்புதமாக இருக்குமாறு அமைத்தனர். 1935 ஆம் ஆண்டில் அதை விஹியர் ப்ரம்பில் லோவெங்கில் வைத்து விட்டார்கள். அரண்மனை வளாகம் மற்றும் வெற்றி கோபுரங்களுக்கு (Victory Gopura) இடையே உள்ள மேடான தளத்தில் அமைந்த அங்கு ஒரு தண்ணீர் குளத்தையும் ஏற்படுத்தி உள்ளார்கள். அங்கு செல்லும் வழிஅரண்மனை வளாகம் மற்றும் வெற்றி கோபுரங்களுக்கு (Victory Gopura) இடையே தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உள்ள அது தெற்கு கிளியான்கின் மேற்குப் பகுதியாகும்.விஹியர் ப்ரம்பில் லோவெங்கிற்கு செல்லும் வழி காட்டும் தரைப் படம்தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |