ப்னோம் பக்ஹெங்Translated into Tamil by Santhipriya அன்கோரை உருவாக்கிய போது ப்னோம் பக்ஹெங் (Phnom Bakheng ) என்ற ஆலயம் அதே பெயரைக் கொண்ட மலை மீது கட்டப்பட்டது. ஆகவே அது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மன்னன் யசோவர்மன் (Yasovarman ) ரோலுஒஸ்சில் ( Roluos) இருந்த தனது தலைநகரை இங்குதான் மாற்றினார். அங்கோர் தோமைவிட யசோதரபுர மிகப் பெரியதாக இருந்தது. பக்ஹெங் கட்டப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு இருந்த பகாங் (Bakong) என்ற ஆலயத்தின் கட்டிடக் கலையை தழுவியே இதுவும் கட்டப்பட்டது. இரண்டுமே பிரமிட்டுகளைப் போல ஒன்றன் மீது ஒன்று அமர்ந்த சதுரமான அடுக்குகளை போல கட்டப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தின் பணி ஒன்பதாம் நூற்றாண்டில் துவங்கியதாகத் தெரிங்கின்றது. 907 AD யில் ஆலயத்தின் நாடு மையத்தில் ஒரு லிங்கம் நிறுவப்பட்டது. அது அவர்கள் குல தெய்வமான கடவுளின் பெயரான யசொதீஸ்வரா என்ற பெயரில் அமைந்தது. 928 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட அந்த ஆலயம் 968 ஆம் ஆண்டு சிறிது காலத்துக்கு ஜெயவர்மன் V என்ற மன்னனினால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. . நான் சூரிய உதயத்தின் பின்னால் சிறிது வெளிச்சம் வந்ததும் அங்கு சென்றேன். முன்பே அந்த ஆலயத்துக்கு செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் ஏறிச் சென்று இருந்தாலும் இந்த முறை அந்த மலை மீது யானை வால் எனப்படும் பகுதியின் வழியே சிரமம் இல்லாமல் ஏறிச் சென்றேன். அந்த ஆலயம் கட்டப்பட்டபோது மலையை சுற்றி தடுப்பு எழுப்பப்பட்டு இருந்தது. மலையின் அடிவாரத்தில் நான்கு முக்கியமான இடங்களில் கோபுரங்கள் இருந்தன. தெற்குப் பகுதி கோபுரத்தைத் தவிர மற்ற திசைகளில் இருந்த கோபுரங்களில் மலைக்குச் செல்ல படிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தெற்கு திசையில் இருந்த கோபுரத்தில் இருந்து மலை மீது செல்ல படிகள் இல்லாததின் காரணம் அந்த மன்னர்களினால் ஆலயம் கட்டி முடிக்கப்படாமல் கைவிடப்பட்டதுதான். மேற்கு திசையில் இருந்த கோபுரமே முக்கியமானதாக இருந்து இருக்க வேண்டும் என்பதின் காரணம் அங்கு காவலில் உள்ளது போல இரண்டு சிங்கங்களின் சிலைகள் காணப்படுகின்றன. ஐந்து அடுக்குகளைக் கொண்ட பிரமிட் ஆலயம் 13 மீட்டர் உயரமானது. பிரமிடுகள் நட்ட நடுவில் அமைந்து இல்லாமல் கிழக்கு பக்கமாக நகர்ந்து உள்ளது போல அமைக்கப்பட்டு உள்ளது. திறந்த வெளி மாடியில் அறுபது சிறிய கோபுரங்கள் அமைந்து உள்ளன. அவை படிக்கட்டுக்களை நோக்கிப் பார்த்தவாறு உள்ளன. ஆலய உச்சியில் 1.6 மீட்டர் உயரமான ஐந்து கோபுரங்கள் உள்ளன. இந்துக்கள் மற்றும் புத்தர்கள் புனிதமாகக் கருதும் 108 என்ற என்னைக் குறிப்பது போல மொத்தம் 108 கோபுரங்கள் பல அளவுகளில் உள்ளன. ஆலயம் பற்றிய தகவல்கள்ஆலயம் ஒன்பது முதல் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ளது. 889-910 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த யசோவர்மன் என்ற மன்னனே அதைக் கட்டி உள்ளார்.பக்ஹெங் ப்னோமிற்குப் போகும் வழிஅங்கோர் வாட்டின் கிழக்கு வாசலிலில் இருந்து சுமார் 1.2 கிலோமீட்டர் தொலைவில் ப்னோம் பக்ஹெங் உள்ளது. சிம் ரிப்பில் இருந்து (Siem Reap) அங்கோர் வாட் செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் ப்னோம் பக்ஹெங்கை அடையலாம். மலை மீது ஏறிச் செல்வது கடினமாக இருக்கும். ஆனால் , US$10 வாடகையில் யானைகள் மீது ஏறிப்போக வசதி உள்ளது. | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |